என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலளவிலும், உள்ளத்தின் அளவிலும் இளமையாக இருக்கும் போது நோய் நொடி நம்மை அண்டாது.
தற்போது நமது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை தினமும் காலையில் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது நமது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வாக்கும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மற்றும் முகத்தில் 20 நிமிடம் வைத்திருந்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.
தக்காளி
உணவில் தக்காளியை அதிகம் சேர்த்து வருவதுடன், அதன் சாற்றினை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவி வந்தால், அது சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி, ஏ மற்றும் கே சத்துக்களை வழங்கி, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளும்.
தேன்
முகத்தில் தேனைத் தடவி 20 நிமிடங்களுக்கு பின் மிதமான நீரால் கழுவவேண்டும். இவ்வாறு செய்யும் போது முகம் மென்மையாகும்.
இவற்றை தொடர்ந்து செய்துவருவதோடு உணவுப் பழக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்யவேண்டும். எண்ணெய் பண்டங்கள், ஃபாஸ்ட்புட்களை தவிர்க்க வேண்டும். வேகவைத்த பதார்த்தங்களை உண்ணுவது மூலம் நாம் முதுமையை தடுக்க முடியும்.