Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”வியாபாரத்திலிருந்த போட்டிகள் நீங்கும் “……. வாக்குறுதிகள் வேண்டாம்……!!!

மேஷராசி அன்பர்களே…!! இன்று வழக்குகளில் திசை ஏற்படும் நாளாக இருக்கும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புக்கள் வழியே கேட்கலாம். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் நீங்கி விருத்தி அடையும். பொருட்கள் வெளியூருக்கு அனுப்பும் பொழுது மட்டும் கவனமாக அனுப்புங்கள்.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பார்ப்பது நல்லது. உங்களுடைய பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். இன்று மனம் சந்தோஷமாக காணப்படும், ஆனால் கூடுமானவரை வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். வாக்குறுதிகள் தயவுசெய்து யாருக்கும் கொடுக்க வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் நமஸ்காரத்தையும் செய்து காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |