மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி .கருப்பண்ணன் தெரிவித்தியுள்ளார் .
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான வேலைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதனை அடுத்து இத்திட்டத்திற்கு பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், இடதுசாரி இயக்கங்களும் ,தமிழ் தேசியவாதிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை காவல் துறை அனுமதி மறுத்ததோடு மட்டுமல்லாமல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் எல்லைக்குள் நுழைய தடை விதித்திருந்தது .இதனைத்தொடர்ந்து இது பரபரப்பாக பேசப்பட இத்திதிட்டம் விவாத பொருளாக மாறிய நிலையில் சுகாதாரம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் அவர்கள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறியதாவது,
மக்களிடம் கருத்து கேட்காமல் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு இதுவரை செயல்படுத்தியது இல்லை. ஆகையால், கூடங்குளம் அணுக்கழிவு அமைக்கும் திட்டத்தை பொருத்தவரையில் மக்களிடம் கருத்து கேட்ட பின்பே திட்டமானது செயல்படுத்தப்படும் என்றும், மக்களுக்கு பாதிப்பு தரும் எந்த திட்டத்தையும் ஒருபோதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செய்யாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அணுக்கழிவு அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.