Categories
உலக செய்திகள்

உணவுப் பிரியர்களை ஈர்த்த… 24 காரட் தங்க ‘பர்கர்’..!!

அமெரிக்காவில் கொலம்பியா மாகாணத்தில் பிரபல உணவகம் ஒன்றில் 24 கேரட் பர்கர் உணவகம் ஒன்று தயாரிக்கப்பட்டது. இது அனைவரையும் ஈர்த்துள்ளது.

துரித உணவு பட்டியலில் பீட்சாவை அடுத்து மிகவும் பிரபலமான உணவுப் பொருள் என்றால் அது பர்கர். காய்கறிகளைக் கொண்டும் பலவகை இறைச்சிகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பார்கருக்கு அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் கொலம்பிய தலைநகர் பொகாட்டாவில் உள்ள பிரபல உணவகத்தில் 24 கேரட் தங்கத்தாலான பர்கரை தயாரித்து உள்ளது. வழக்கமான இறைச்சியின் மேல்பகுதியில் 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. அந்த உணவகம் சார்பில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அந்த பர்கரின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பர்கரின் விலை 57 டாலராகும். இந்திய மதிப்பில் 4191 ஆகும்.

Categories

Tech |