Categories
தேசிய செய்திகள்

“கணவர் கண் முன்னே மனைவியை சீரழித்த கும்பல்” சாகும் வரை தூக்கிலிட வேண்டும் – மாயாவதி ஆவேசம்!!

ராஜஸ்தானில் கணவர் கண் முன்னே  தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை சாகும் வரை தூக்கிலிட வேண்டுமென, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் கடந்த  ஏப்ரல் மாதம் 26ம் தேதி கணவரை தாக்கிய கும்பல் ஒன்று அவரது கண் முன்னேயே அவரது  மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த  கொடூர சம்பவத்தை  வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இதனால் இச்சம்பவம் குறித்து கணவர் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத காவல்துறை, அந்த வீடியோ வைரலாகிய பிறகே கடந்த 2ம் தேதி வழக்கு பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, குற்றவாளிகள் அனைவரையும்  சாகும் வரை தூக்கிலிட வேண்டும். மேலும்  பாதிக்கப்பட்டவர்கள் அளித்த  புகாரை அலட்சியப்படுத்திய காவல் துறை மற்றும் ஆளும் காங்கிரஸ் அரசின்  மீதும் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |