கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கற்றாழை உபயோகிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரி செய்து விடும். அனால் கற்றாழையை அப்படியே உபயோகிப்பது நல்லதல்ல. இது சருமத்திற்கு எரிச்சல் உண்டாக்கி விடும். சில பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எதனுடன் கற்றாழையை சேர்த்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
மஞ்சள்:
கற்றாழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் போட்டு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவலாம். இப்படி செய்வதனால் எண்ணெய் வழியாது. பருக்கள் குறையும். இது அதிக எண்ணெய் மற்றும் முகப்பருக்கள் இருப்பவர்கள் உபயோகிக்கலாம்.
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காய் அரைத்து கற்றாழையுடன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். வாரம் மூன்று முறை செய்து வந்தால் நுண்ணிய சுருக்கங்களும் காணாமல் போகும்.
அரிசி மாவு:
முகம் கழுத்துப் பகுதியில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற இந்த குறிப்பு சிறந்தது. அரிசி மாவுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை எடுத்து அதில் கலந்து முகம் மற்றும் கழுத்தில் மென்மையாக தடவி பின் குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
பால்:
வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்க வேண்டும். பாலில் கற்றாழை கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவாக இருக்கும்.