Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…”வீண் பேச்சுகள் வேண்டாம்”.. அரசியலில் எந்த முடிவும் சாதகமாக முடியும்…!!

மகரம் ராசி அன்பர்களே…!!  இன்று வீணான பேச்சுக்களில் கவனம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை பாதுகாப்பது நல்லது. அதிகம் பயன் தராத பொருள்களை விலைக்கு வாங்குவதை தவிர்க்கவும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று அரசியல் துறையினர்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய நிதி மேலாண்மை சீராகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.  கணவன் மனைவிக்கு இடையே எந்த பிரச்சினை இல்லை நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |