Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு…”கூடுதல் பணவரவு”…. வீண் வாக்குவாதம் வேண்டாம்…..!!

மகர ராசி அன்பர்களே…!!  இன்று வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வழி பிறக்கும். அக்கறையுடன் பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை இலக்கு பூர்த்தியாகும். கூடுதல் பணவரவு மூலம் குடும்ப தேவையை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் தைரியம் அதிகரிக்கும். எதையும் யோசித்து செய்வது மட்டும் நன்மையை கொடுக்கும்.

கோபமாக பேசுவதை தவிர்த்து விட்டு நிதானமாக பேசி செயல்படுவதுதான் காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதே போல மற்றவர்களிடம் பேசும் பொழுது வீண் வாக்குவாதம் வேண்டாம். யாருக்கும் இன்று நீங்கள் பஞ்சாயத்தும் சொல்ல வேண்டாம். இன்று கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். அதே போல குடும்பத்திற்கு தேவையான பொருள்களையும் இன்று நீங்கள் வாங்க கூடும்.

இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபட்டால், அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |