Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…”ஞாபகசக்தி சிறப்பாக இருக்கும்”.. வீண் அலைச்சல் ஏற்படலாம்…!!

மகரம் ராசி அன்பர்களே…!!  இன்று ஞாபகசக்தி சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் குறுக்கிடும் சிரமம் வெல்லும் திறன் இருக்கும். தொழில் வியாபார வளர்ச்சி பணி இனிதாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். அன்புக்குரியவர் பரிசுகள் கொடுப்பார்கள்.இன்று வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.

புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது ரொம்ப சிறப்பு. காரியத்தில் அனுகூலமும் இருக்கும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மையும் கிடைக்கும். பண வரவு ரொம்ப சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லை சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |