மகரம் ராசி அன்பர்களே…!! இன்று பணிகளில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கும் வகையில் தாராள பணவரவு உண்டாகும். வெகு நாள் காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். புதிய முயற்சியால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடைபெறும். இன்று பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும்.
காரியத்தில் அனுகூலமும் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகுந்த காலகட்டமாக அமையும். கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி முன்னேற்ற பாதையை நோக்கி இன்று செல்வீர்கள். இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக இருக்கும். உங்களுடைய மனமும் மகிழ்வாக காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்