சருமத்தின் அழகில் முக்கிய பங்களிப்பை கொடுக்கும் மோர் அதை பற்றிய விரிவான தொகுப்பு
உடல் சூட்டை தணிக்க மோர் உதவி புரியும் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் சருமத்தின் அழகுக்கும் மோர் உதவும் என்பது பலரும் அறியாத ஒன்று.
வெயிலினால் ஏற்படும் கருமை
மோர் உடலின் சூட்டை தணிப்பது மட்டுமல்லாமல் வெயிலினால் சருமத்தில் ஏற்படும் கருமை மற்றும் வறட்சியையும் சிறந்த முறையில் போக்குகிறது.
மோரில் வைட்டமின் சி மற்றும் ஏ இருப்பதால் சருமத்தின் அழகை சீரான முறையில் பாதுகாக்கின்றது.
முகப்பரு
முகத்தில் பரு ஏற்பட்டால் தொல்லையாக இருக்கும். அதனை சரிசெய்ய தினமும் பருவின் மேல் மோரை தடவிவந்தால் வருவதாலும் தினமும் மோரைக் குடித்து வருவதாலும் நாளடைவில் பருக்கள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
பேசியல் வேண்டாம்
முகம் பொலிவு பெற பேசியல் தேவையில்லை. அதற்கு பதிலாக மோரை தினமும் குடித்து வருவதால் முகம் இயல்பாகவே பளிச்சென்று காணப்படும்.
வயதான தோற்றம்
வயது அதிகரிப்பது முகத்தில் ஏற்படும் கோடுகளால் தெரியவரும். அதனை தடுக்க மோரில் மஞ்சள் அல்லது சந்தனம் கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் கழுவி வர சருமத்தில் மாற்றம் ஏற்படும்.