டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எப்பொழுதுமே வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் அனைவருமே பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதற்கும், மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும் மனதிற்கு அமைதியான இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அப்படி இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்தியாவில் எந்தெந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தவாங், அருணாச்சலப் பிரதேசம்: இந்த இடம் இந்தியாவின் பாராட்ட படாத இடங்களில் முக்கியமாக ஒன்றாகும். இங்கு இயற்கை எழிலும், ரம்யமான காட்சிகளும் மிகுந்து மனதிற்கு அமைதியை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. வெளியூர்களிலிருந்து இங்கு வருவதற்கு அனுமதி பெற்ற பிறகு தான் உள்ளே நுழைய முடியும்.
கோகர்ணா, கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோகர்ணா எனும் இடத்தை பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது. ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையிள் மனதிற்கு இதமான அமைதியான இயற்கை எழில் மிகுந்த சூழலில் குடும்பத்தோடு அனுபவிக்க விருப்பம் இருந்தால் இந்த இடம் மிகவும் ஏற்றது. அலாதியான கடற்கரையில் கூட்ட நெரிசல் இல்லாமல் இருக்கும். இந்த நகரமும் கண்டிப்பாக மன அழுத்தத்தை குறைத்து மனதிற்கு அமைதியை கொடுக்கும்.
கலிபோன், மேற்கு வங்காளம்: மேற்கு வங்காளத்தில் உள்ள கலிபோன் என்ற இடம் இன்னமும் பலரும் அறியப்படாத ஒரு இடமாக உள்ளது. இங்கு சுற்றி பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளது. மேலும் தங்குவதற்கு ஆடம்பர விதிகளும் இங்கு இருப்பதால் குடும்பமாக வந்து பொழுதை கழிப்பதற்கு இது சிறந்த இடம். முக்கியமாக மிகவும் பிரபலமான டார்ஜிலிங் என்ற இடத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.