ராமநாதபுரத்தில் பட்டா கத்தி மற்றும் கஞ்சா வைத்து சுற்றித்திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி அப்பகுதியில் சுற்றி திரிந்த 6 இளைஞர்களை போலீசார் பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரித்ததில் திருப்பத்தூரை சேர்ந்த லோகேஸ்வரன்(20), காரைக்குடியை சேர்ந்த ராஜேஷ் (24), சுரேஷ்குமார் (23), சத்தியநாராயணன் (19), மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் பட்டா கத்தி மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர்களை கைது செய்து விசாரித்ததில் நண்பரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு கத்தியுடன் வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.