Categories
உலக செய்திகள்

“காதலியை குஷிப்படுத்த” 1 பர்கர் சாப்பிட…. 1.50 செலவில் ஹெலிஹாப்டரில் பறந்த…. சுவாரஸ்ய சம்பவம்…!!

நபர் ஒருவர் பர்கர் சாப்பிடுவதற்காக ஹெலிஹாப்டரில் தனது காதலியுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த பெரும் பணக்காரரான விக்டர் மார்டினா(33). இவர் அலுஸ்டா என்ற பகுதியில் விடுமுறையை கொண்டாட தன்னுடைய காதலியுடன் சென்றிருந்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட உள்ளூர் இயற்கை உணவானது அவர்கள் இருவருக்கும் பிடிக்கவில்லையாம். இதனால் தன்னுடைய காதலியை குஷிப்படுத்தும் விதமாக விக்டர், உணவு சாப்பிட தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அருகே இருந்த 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பர்கர் ஹோட்டலுக்கு ஹெலிகாப்டர் புக் செய்து காதலியுடன் பறந்துள்ளார்.

அங்கு சென்று விக்டர் பிரைஸ், பர்கர் மற்றும் மில்க் ஷேக் போன்ற உணவுகளை ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் மொத்த செலவு மட்டும் 49 பவுண்டுகள். இதை சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் புக் செய்த செலவு 2 ஆயிரம் பவுண்டுகள் ஆகும். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விக்டர் விமானங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து விகடன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், “என்னுடைய காதலியும், நானும் நிறைய இயற்கை உணவை சாப்பிட்டு சோர்வடைந்தோம். ஆகவே நாங்கள் ஹெலிகாப்டர் மூலம் புக் செய்து எங்களுக்கு பிடித்த உணவு சாப்பிட்டோம்” என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார். ஒரு பர்கர் சாப்பிடுவதற்காக விமானத்தில் பறந்து வந்தது, தங்களின் சாகச பயணம் என்றும் விக்டர் குறிப்பிட்டு இருந்துள்ளார். சாப்பிட்டு முடிந்ததும் மீண்டும் தங்கள் பகுதிக்கு விமானத்தில் பறந்து சென்றுள்ளனர் விக்டர் மற்றும் அவருடைய காதலி.

Categories

Tech |