Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னோட உழைப்பில் சாப்பிடுவ… என்ன கோயிலுக்குள்ள விட மாட்டே: சீமான் ஆதங்கம்

பல்கலைக்கழக ஆளுநரை மாநில அரசே நியமிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதில் சட்ட சிக்கல் இருப்பதாக ஆளுநர் கூறியது குறித்து பேசிய சீமான்,

சட்டமசோதா அவங்க வசதிக்கு இல்ல. அதனால சட்டம் சிக்கலாகிறது. இதுக்கு முன்னாடி எல்லாம் நாம தான் நியமிச்சிட்டு இருந்தோம். அண்ணல் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்காகட்டும், இசை கல்லூரிக்காகட்டும், இசை பல்கலைக்கழகத்திற்கு ஆகட்டும், அண்ணா பல்கலைக்கழகம் என எல்லாத்துக்குமே நீங்களே துணை வேந்தரை போடுறீங்க.

எல்லாமே ஆர்எஸ்எஸ் இல்ல ஆர்எஸ்எஸ் ஆதாரவாளர்களுக்கு. அப்புறம் அதுல என்ன சொல்றதுக்கு இருக்கு ? எங்களுக்குன்னு என்னதான் இருக்கு ? மாநிலத்துக்கு என என்ன உரிமை தான் இருக்கு சொல்லுங்க?  அதுதான் முதல்வர் கூட அன்னைக்கு இரண்டு ஆட்சி நடக்குது அப்படின்னாரு. ஆளுநர் ஒரு ஆட்சி நடத்திட்டு இருக்காரு, திமுக ஒரு ஆட்சி நடக்குது. ரெண்டு ஆட்சி நடத்த பாஜக முயற்சிக்குது அப்படின்னு அவரே சொல்றாரு

ஐயா கலைஞர் கருணாநிதி,  அம்மையார் ஜெயலலிதா இருக்கும்போது துணை வேந்தர் நியமனம் இப்படி நடந்ததா ? என நீங்களே பாருங்க. இந்த மாதிரி நியமனங்கள்… எதோ வானளாவுன அதிகாரம் ஆளுநருக்கு இருப்பது போலவும், ஒவ்வொன்னையும் அவங்களைளே முடிவு செய்து, அவங்களே இயக்குவது என்பது நாட்டின் ஒற்றுமைக்கு சீர்குலைவு. ஒரு பக்கம்  இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு நடக்கிறேன் என ராகுல் காந்தி சொல்கிறார்.

மாநிலங்களின் தன்னாட்சி உரிமை,  மாநிலங்களின் உரிமையை முன்வைக்காது. அதற்கு முன்னுரிமை கொடுக்காது தேசத்தை எப்படி ஒற்றுமையாகுவிங்க ? இந்த நாட்டை எப்படி ஒன்றிணைந்த நாடா வைப்பீங்க. நீங்களே பாருங்க…  என்னுடைய எல்லா உரிமையும் நீங்க எடுத்துக்கிட்டு,  ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்விக் கொள்கை. ஒரே வரி எல்லாம் ஒன்னா இருக்கு. ஒரே சுடுகாடு இருக்குமான பேச்சு கிடையாது.

கோயில்ல எல்லாரும் போய் ஒன்னா கும்பிடலாமா? நாங்க தாழ்த்தப்பட்டவனும் வரி கட்டணும்,  அந்த வரியில நீ உயர்ந்த சாதிங்கிறவன் சாப்பிடுவான். என்னோட உழைப்பில் இருந்து சாப்பிடுவ, என்ன கோயிலுக்குள்ள விட மாட்டே. அப்போ என்ன சமூக நீதி இருக்கு ? என்ன சமத்துவம் இருக்கு ? இந்த நாட்டுல. சமத்துவம், சகோதரத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை எல்லாம் வெறும் வெற்று வார்த்தை தான் அப்போ என தெரிவித்தார்.,

Categories

Tech |