இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இந்திய பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயல்வதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.
பின்னர் அவரை எச்சரிக்கை விடுத்தும் அவர் மீண்டும் எல்லைக்குள் நுழைந்ததால் அவரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அந்த நபர் காஷ்மீரில் ஏதேனும் தாக்குதல் நடத்த திட்டமிட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.