Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அபாரதத்திலிருந்து தப்பிக்க… முகக்கவசம் அணிய வேண்டும்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் நலன் குறித்தும், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு அடுத்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்து வரும் கொரோனா சிறப்பு முகாமையும் பார்வையிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையையும் ஆய்வு செய்துள்ளார். மேலும் நகராட்சி ஆணையரிடம் வீட்டு தனிமையில் இருப்பவர்களை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட ஆட்சியர் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள் மீது கடுமையான அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி, தாசில்தார் மார்ட்டின், நகராட்சி ஆணையர் ராமர், சமூக நலத் திட்ட தாசில்தார் அப்துல் ஜபார் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

Categories

Tech |