Categories
உலக செய்திகள்

பேஸ்புக், டுவிட்டருக்கு…. மெக்சிகோவில் தொடரும் சிக்கல்..!!

பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில், சட்டம் கொண்டு வர, மெக்சிகோ செனட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டப்படி, பிரச்னைக்குரிய சமூக வலைதள கணக்குகளை முடக்கவோ, நீக்கவோ, தொலைதொடர்புத்துறைக்கு அதிகாரம் இருக்கும்.
மெக்சிகோ சமூக வலைதள பயனர்களில், 90 சதவீதம் பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இத்துடன் டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்றவையும் புதிய சட்டத்தில் சேர்க்கப்படும்.

ஆளும் கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர் ரிக்கார்டோ மான்ரியல், இந்த சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளார். மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓப்ரடாரும், சமூக வலைதளங்களை குறை கூறும் போக்குடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |