Categories
தேசிய செய்திகள்

வருமானவரி தாக்கல் செய்ய…. இன்றே கடைசி நாள்…. நாளை ரூ.10000 அபராதம்…!!

வருமானவரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் உடனே கணக்கை தாக்கல் செய்யுமாறு வருமானவரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு அந்த வருடத்தின் ஜூலை மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக முதலில் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க வருமான வரி அலுவலகம் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி இன்றுடன் வருமானவரி தாக்கல் செய்யும் காலம் முடிவடைகிறது. எனவே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் இன்று அபராதம் இல்லாமல் தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யாதவர்களுக்கு நாளை முதல் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி தான் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |