ஜப்பான் நாட்டின் முன்னேற்றம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
ஆசிய நாடுகளிலேயே வளர்ச்சியடைந்த நாடுகள் ஒன்று ஜப்பான். இந்த நாட்டு மக்கள் நேரம் தவறாமைக்கு பெயர் பெற்றவர்கள் ஆவர். இவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அந்த நேரத்தில் அதை சரியாக செய்து முடித்து விடுவார்கள். இதுதான் அவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த நாடு குறித்து சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம். ஜப்பான் நாட்டின் மனிதர்கள் மட்டுமல்ல, அங்குள்ள ரயில்களும் கூட நேரத்தை சரியாகக் கடைப் பிடிக்கும் என்று கூறபடுகிறது. இங்கு பெரும்பாலும் ரயில் 30 நொடிக்கு அதிகமாக தாமதத்தை எடுத்துக் கொள்ளாத வரையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பெரும்பாலும் சரியாக வந்துவிடும்.
ஆனால் நம் நாட்டில் ரயிலில் பயணித்த ஒருவருக்கு எவ்வளவு பெரிய சோதனை என்பது நமக்குத்தான் தெரியும். அங்கு 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பள்ளியில் தேர்வு என்பதே கிடையாது. பத்து வயதுவரை குழந்தைகள் அவர்களின் குழந்தை பருவத்தை அனுபவிக்க வேண்டு என்று ஜப்பான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஜப்பான் நாட்டில் சத்தமாக பேசுவது கடுமையான செயலாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று சத்தமாக பேசுபவரை ஜப்பானியர்கள் வித்தியாசமாக பார்ப்பார்கள். அதே நேரத்தில் பொது வெளியில் செல்லும்போது இருவர் கைபிடித்து நடந்து சென்றால் அந்நாட்டு மக்களால் தவறாக பார்க்கப்படுகிறது.
கோவிலுக்கு செல்லும் மக்கள் 108 முறை மணியடித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. மக்கள் ஒவ்வொரு ஒருவர் வணக்கம் தெரிவிப்பதற்காக தன்னுடைய இரு கைகளை மூடிக்கொண்டு, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி குனிந்துதான் வணக்கம் சொல்லவேண்டும் என்பது ஜப்பான் முறையாகும். பதிலுக்கு அவரும் குனிந்து வணக்கம் சொல்ல வேண்டுமாம். ஜப்பானில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்தம் கடைபிடிப்பது என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்நாட்டில் உள்ள பள்ளிகளில் தினமும் மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து தான் வகுப்பறையை சுத்தம் செய்வார்களாம். ஜப்பானியர்களின் சராசரி வயது 82 ஆகும். இந்தியாவை விட சராசரி வயது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.