Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஏழ்மை நீங்க… பணவரவு அதிகாரிக்க… செய்ய வேண்டியவை…!!

வறுமையின் பிடியில் இருப்பவர்கள் பண பிரச்சனையை தீர்க்க பல வழிகளைத் தேடுவர்.  சிலர் ஆன்மீகத்தை தேடி வருவர். அவர்களுக்கான சில வழிபாட்டுமுறைகள்

  • வெள்ளிக்கிழமை அன்று சுண்டல் மற்றும் மொச்சை பயிறை மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக படைத்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் அதனை சாப்பிடக் கொடுக்க வேண்டும் இதனை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இல்லத்தில் பண வரவு அதிகரிக்கும்.
  • பகல் 12 மணி அளவில் திருநங்கைக்கு உண்ண உணவளித்து அவர்கள் கையால் பணம் பெற்றுக் கொண்டால் வீட்டில் பணம் தங்கும்.
  • வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் தாயாருக்கு பால் அபிஷேகம் செய்ய பால் வழங்கி வந்தால் பணம் இல்லம் தேடி வரும்.
  • தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமை பசும்பாலை வில்வ மரத்திற்கு ஊற்றி மனதார வணங்கி வந்தால் பணவரவு அதிகரிக்கும்.
  • தமிழ் மாதத்தில் வரும் முதல் திங்கள் கிழமை என தொடர்ந்து 12 மாதம் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து வந்தால் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
  • தினமும் வீட்டில் அதிகாலையில் சுப்பிரபாதம் அல்லது விஷ்ணுவின் நாமம் ஒலிக்குமாறு செய்தால் செல்வம் செழிக்கும்.
  • வீட்டின் தலைவாசல் பகுதியில் வெள்ளியாலான தகட்டில் கஜலட்சுமி உருவத்தை பதித்து வைப்பதன் மூலம் இல்லத்தில் செல்வம் சேர்ந்து கொண்டே போகும்.
  • ஐப்பசி மாதம் வளர்பிறை அன்று மகாலட்சுமியை வணங்கி வருவதன் மூலம் செல்வம் அதிகரிக்கும்.
  • தாய் பசு மற்றும் அதன் கன்றுக்கு உணவளிப்பதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் வீடு தேடி வரும்.
  • குபேரனுக்கு விளக்கேற்றும்போது தாமரை திரி போட்டு விளக்கேற்றினால் பணவரவு அதிகரிக்கும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |