மும்பை மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர் சர்க்கரை வியாபாரியிடம் 6.9 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மாநிலம், தானே மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியை கடந்த 20ஆம் தேதி தினேஷா என்பவர் சந்தித்து 20 டன் சர்க்கரை வேண்டும் என்றும், அதை இயலாதவர்களுக்கு தானமாக வழங்க போகிறேன் எனக்கூறி வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை பிறகு தருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதையும் நம்பி அந்த வியாபாரி அவருக்கு சக்கரையை கொடுத்துள்ளார். பின்னர் பணத்தை கேட்டு கால் செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வியாபாரி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் தினேஷ் ஷா என்று அழைக்கப்படுபவர் துஷார் லாகுர் என்பதும், அவர் தனது கூட்டாளியான முகமது சையது என்பவருடன் சேர்ந்து மோசடி செய்ததும் தெரியவந்தது. பின்னர் முகமது சையதை கைது செய்து குடோனில் மறைத்து வைத்திருந்த சக்கரை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் தலைமறைவாகியுள்ள துஷார் லாகுர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.