கண்பார்வை குறைபாடு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருந்து வருகிறது. சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது தான் கண்பார்வை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அந்தவகையில் என்ன சாப்பிட்டால் கண்பார்வை அதிகரிக்கும் என்பது பற்றிய தொகுப்பு
- மலைவாழைப்பழம் மற்றும் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவு நேரம் சாப்பிட்டு வருவதால் கண் பார்வைத் திறன் மேம்படும்.
- கண்ணில் எந்த நோய் அறிகுறி தென்பட்டாலும் அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வருவதால் கண் நோய் குணப்படுத்த முடியும்.
- நெல்லிக்காய் காயவைத்து பொடிசெய்து ஒருநாளைக்கு மூன்று கிராம் வீதம் சாப்பிட்டு வருவதால் கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.
- வெல்லம், சீரகம், கொத்தமல்லி விதை இவை மூன்றையும் நன்றாக இடித்து பொடியாக்கி காலை மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் கண்பார்வை தெளிவு பெறும்.
- 100 கிராம் கேரட், துவரம் பருப்பு, தேங்காய் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் கண்பார்வை திறன் மேலோங்கும்.
- துவரம் பருப்பு மற்றும் முருங்கைக்கீரை இவற்றை சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் கண்பார்வை தெளிவாகும்.