Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கம்… அசத்தும் வீரர்கள்….!!

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து யாதவ் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

புதுடெல்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்  போட்டி நடைபெற்று வருகின்றது. அதில் 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர். நேற்று போட்டி முடிவில் 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது. இன்று காலையில் இந்தியாவுக்கு ஆண்டுகளுக்கான 50 மீட்டர் 3 நிலை ரைபிள் பிரிவில் மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் இந்த  தங்கப் பதக்கத்தின் பெற்றுக்கொடுத்தார். போபாலை  சேர்ந்த இவர் 460 2.5 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த பிரிவில் பங்கேற்ற மற்ற இந்தியர்களான சஞ்சீவி ராஜ்புத், நீரஜ்குமார் ஆகியோரால் ஐந்து மற்றும் எட்டாவது இடங்களையே பிடிக்க முடிந்தது. ஹங்கேரியை சேர்ந்த இஸ்வான் பெனி 461.6 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், டென்மார்க்கை சேர்ந்த ஸ்டீபன் ஒல்சன் 450.9 புள்ளிகள் பெற்ற வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

அதன் பின்பு பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சிங்கி யாதவ் தங்கம் வென்று அனைவரையும் அசத்தினார். ராகி சார்னோபத்  வெள்ளிப் பதக்கம், மனு பாகெர் வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்தப் பிரிவில் மூன்று பதக்கங்களையும் இந்தியா கைப்பற்றி உள்ளது. இந்த மூன்று வீராங்கனைகளும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இடம் பெற்றுள்ளனர். துப்பாக்கி சுடுதல்  போட்டியில் சாதனை படைத்து வரும் இந்திய அணிக்கு விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரீஜிஜீ  பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |