Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு கிராமத்தை உருவாக்கியுள்ள சீனா”… பெரும் அதிர்ச்சி..!!

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது.

இந்திய – சீன எல்லைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலம், டோக்லாமில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் புதிதாக பதுங்கு குழிகளை அமைத்திருப்பது, செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியிலிருந்து 4.5 கிலோமீட்டர் தொலைவில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. 100 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தை உருவாக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரத்யேகமான இந்த செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் சுமார் 4.5 தூரத்தில் இந்த கட்டுமானம் அமைந்துள்ளதாக வல்லுநர்களின் பகுப்பாய்வு கூறுகின்றது.

Categories

Tech |