Categories
உலக செய்திகள்

கிருமி நாசினி தொழில்நுட்பங்கள்…! ”ஹாங்காங் விமான நிலையம்” செம ஐடியா …!!

ஹாங்காங்கில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் கிருமிநாசினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்

உலக நாடுகளில் கொரோனா பரவத் தொடங்கியதும் ஹாங்காங் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக அங்கு தொற்றின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஹாங்காங்கில் மீண்டும் தோற்று பரவ வாய்ப்பு இருப்பதால் அதனை எதிர்கொள்ள பல்வேறு வகையில் தயாராகி வருகின்றது அந்நாட்டு அரசு.

அதன் ஒரு முயற்சியாக விமான நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் “தொற்று பரவலை தடுக்க விமான நிலையங்களில் பிரத்தியோகமாக கிருமிநாசினி தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்பு ஒன்றை நிறுவி உள்ளோம்.

டெலிபோன் பூத் அளவில் காட்சியளிக்கும் அந்த அமைப்பில் ஃபோடோகேட்டலிஸ்டு, நானோநீட்சில் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மனிதர்களின் உடலில் இருக்கும் 99% கிருமிகளை இந்து கருவிகளால் அழிக்க முடியும். சுகாதாரப் பணியாளர்கள் தற்போது இந்த அமைப்பை பயன்படுத்தி வருகிறார்கள்” என தெரிவித்தார்

Categories

Tech |