தற்போது உடல் எடை அதிகரிப்பு என்பது பல பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பல்வேறு சிகிச்சை முறைகள் மூலம் உடல் எடையை குறைக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். உடல் எடையை குறைக்க நினைத்தால் இயற்கை வழியில், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில் தற்போது டீடாக்ஸ் தண்ணீர் பிரபலமாகி வருகிறது.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும். இந்த நீரை பருகுவது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். எப்படி தயாரிக்கலாம் என்பதை இதில் பார்ப்போம். சுத்தமான ஒரு லிட்டர் குடிநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி எலுமிச்சையை வட்டமாக வெட்டி போட வேண்டும். பிறகு புதினா இலையை ஒரு கையளவு போட வேண்டும்.
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறிதாக வெட்டி தண்ணீரில் போட வேண்டும். அதன் பின் தட்டு போட்டு மூடி 4 முதல் 5 மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம். இதனை தொடர்ந்து தினமும் குடித்துவர உடல் எடை குறையும். இஞ்சி நம் உடலில் உள்ள பித்தத்தை குறைக்கும். தேவையற்ற கொழுப்புகளைக் கரைப்பதோடு புத்துணர்ச்சியாக இருக்கும்.