உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய பானத்தை பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பலரையும் பாடாய்படுத்தி எடுத்து வருவது உடல் எடை அதிகரிப்பும், தொப்பையை குறைப்பதற்கும் பல விதமான உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். இதை குறைப்பதற்கு பலவிதமான உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர். இதற்கு ஒருசில பானங்கள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் தேங்கி இருக்கும், அதிகபடியான கொழுப்புகளை கரைத்து, விரைவில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகின்றன. இன்று நாம் உடல் எடை குறைப்பதற்கான ஒரு அற்புதமான பானத்தை பார்க்கலாம். நம் முன்னோர்கள் இந்த பானத்தை பயன்படுத்தி உள்ளனர். எலுமிச்சையில் வெல்லம் கலந்து குடித்தால் வயிற்றில் தங்கியிருக்கும் கொழுப்புகள் விரைவில் கரைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்
வெல்லம் ஒரு டீஸ்பூன்
வெதுப்பான நீர் ஒரு டம்ளர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடாக்கி இறக்கி கொள்ள வேண்டும்.
வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்தால் பானம் தயாராகிவிடும்.
தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீக்கு பதிலாக வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடித்து வந்தால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்.