மதுரையில் மரிக்கொழுந்துக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மரிக்கொழுந்து அதிகம் விளைகிறது. ஒரு காலகட்டத்தில் மதுரையில அதிகம் விளைவது. இந்த மரிக்கொழுந்து அழிவின் விளிம்பில் இருப்பதால் இதற்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மலர் மொத்த வியாபாரிகள் நல சங்கம் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இது குறித்து நபார்டு வங்கியின் மாபிப் பிரிவின் சிஇஓ சிவகுமார் கூறியதாவது: நூற்றாண்டுகளாக நடைபெறும் மீனாட்சி கல்யாணத்தில் மல்லி மரிக்கொழுந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1800ஆம் ஆண்டு காலம் முதல் இது பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் வாசனை திரவியம் எடுப்பது குறித்த ஆவணங்களும் உள்ளன. இவற்றை வைத்து புவிசார் குறியீடு விண்ணப்பித்துள்ளோம். பதினோரு மாதங்களுக்கு பின் இதற்கான அங்கீகாரம் கிடைக்கும். இந்த குறியீடு பெற்ற பின் மதுரை மரிக்கொழுந்து என்ற பெயரில் ஏற்றுமதியாகும். விலை ஓரளவு நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.