Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் – போலீசிடம் சிக்கியது எப்படி?

காதலியை சந்திப்பதற்கு பிறர் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் இளைஞரொருவர்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.

பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருகிலிருந்த பெட்ரோல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்வது பதிவாகியிருந்தது. அந்த இளைஞர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த கொத்தனார் ராஜாங்கம் என்பதும் தெரிய வரவே அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குடோன் உரிமையாளர் உடன் ஏதேனும் முன் பகையா? கொலை முயற்சியா? என பல்வேறு கோணங்களில் விசாரித்த காவல்துறையினருக்கு ராஜாங்கம் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே குடியிருப்பில் தான் தன் காதலி இருப்பதாகவும் அவரை சந்திக்கச் செல்லும் பொழுது மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பவே மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறியிருக்கிறார் ராஜாங்கம்.

மக்களை திசை திருப்பி தன் காதலியை சந்தித்து விட்டதாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார் ராஜாங்கம். இச்சம்பவத்தை தொடர்ந்து ராஜாங்கம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |