தாராவியில் இன்று ஒருவருக்குக்கூட புதிதாக தொற்று ஏற்பட வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோது உண்மையில் முதலிடத்தில் இருந்தது மும்பை. அதிலும் ஆசியாவின் மிகப்பெரிய ஏரியான தாராவியில் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இருப்பினும் தீவிர முயற்சிக்குப் பின்னர் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தாராவியின் முயற்சிக்கு உலக சுகாதார துறை பாராட்டை தெரிவித்து வருகிறது. முதல் முறையாக தாராவியில் இன்று ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை ஒட்டுமொத்தமாக தாராவியில் 3,788 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இவர்களில் 3,464 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வெறும் 12 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று தாராவியில் முதல் முறையாக ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. தாராவியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மிகவும் நெருக்கமான, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்து வரும் தாராவி குறித்து சுகாதாரத் துறை வல்லுனர்கள் பெரும் அச்சத்தில் இருந்தன. இருப்பினும் வீடுவீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு, மக்களின் ஒத்துழைப்பாலும், தீவிர முயற்சியின் காரணமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.