Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த உணவை நீங்கள் சாப்பிடுறீங்களா…? வைரஸ் தாக்கத்தை தடுக்க முடியும்….!!

ஜப்பானில் புற்றுநோய் மையம் நடத்திய ஆய்வு ஒன்றில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த உணவு பொருளை சாப்பிடும் மனிதனின் உடலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாக தெரிய வந்துள்ளது அதன் அடிப்படையில் வைட்டமின்-சி சத்து நிறைந்த உணவுப் பொருட்களை நீங்களும் எடுத்துக் கொள்கிறீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள்

கொய்யாப்பழம்

வைட்டமின் சி சத்து நிறைந்த கொய்யாப்பழம்  இனிப்பு தன்மை அதிகம் கொண்டதாக உள்ளது. யாரொருவர் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுகிறாரோ அவர் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறைந்து ரத்த அழுத்தம் சீராக ஆரோக்கியமான இதயத்தை பெறுகிறார். மேலும் கொய்யாப்பழத்தில் இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் உடலில் அதிக அளவு நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

ஸ்ட்ராபெரி

கண்ணைக் கவரும் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஸ்ட்ராபெரி பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. தினமும் ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் இதய நோய்கள் தடுக்கப்பட்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.

பப்பாளி

பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு சுமார் 87 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி சத்து கிடைக்கப்பெறுகிறது. இது உடலில் ஏற்படும் பதற்றத்தை குறைப்பதோடு உடலில் இருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடல் எடையை குறைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் துணைபுரிகிறது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் ஏற்படும் செல் சேதத்தை தடுக்கின்றது மற்றும் அதில் இருக்கும் வைட்டமின் பி6, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் ரத்தத்தில் கொழுப்பை குறைத்து இதய நோய்கள் உருவாவதை தடுக்கிறது.

Categories

Tech |