Categories
உலக செய்திகள்

ஒருவருக்கு கூட இல்லை… புது விதமாக அசத்தும் ஆப்பிரிக்க நாடு… பாராட்டக்கூடிய நடவடிக்கை!

 ருவாண்டா நாட்டில் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்புவதற்கு அந்நாடு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டை பெற்றுள்ளது.

சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்கச் செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மிரட்டும் கொரோனாவிற்கு இதுவரை 4600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய வைரஸிலின் தாக்கத்தால் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளும் பல வழிமுறைகளை கையாண்டு வருவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

Image result for To prevent the risk of #Coronavirus outbreak, passengers at the Kigali Bus Park have to wash their hands before getting into bus.

அந்த வகையில்  கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டா ஒரு வித்தியாசமான வழிமுறையை கையாண்டுள்ளது. ஆம், அந்நாட்டின் (#Rwanda) தலைநகர் கிகாலியில் (Kigali) பேருந்து நிலையம் , ரயில் நிலையங்கள், பூங்கா மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்கள் தங்கள் கைகளை நன்கு கழுவி சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக சிறியரக வாஷ் பேசின்களை வரிசையாக வைத்திருக்கிறது. கொரோனா அபாயத்தைத் தடுக்க, கிகாலி பஸ் பூங்காவில் பயணிகள் பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பு கைகளைக் கழுவ வேண்டும் அரசு கூறியிருக்கிறது.

Image result for To prevent the risk of #Coronavirus outbreak, passengers at the Kigali Bus Park have to wash their hands before getting into bus.

ருவாண்டாவில் கொரோனா தொற்றுநோய் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அந்தநாடு விழிப்புணர்வை அதிகரித்துள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றாலும், அவர்கள் எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாராட்டக்கூடியதாக இருக்கிறது.

 

Categories

Tech |