Categories
அரசியல் மாநில செய்திகள்

“திருட்டை தடுக்க” வீட்டின் அறை தவிர…. நாடெங்கிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் – சீமான் அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட உள்ளது. இதில் 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து திருவொற்றியூர் பகுதியில் சீமான் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் அங்கு பிரச்சாரம் செய்த அவர், ” என்னுடைய ஆட்சியில் பெண்களிடம் பாலியல் அத்துமீறல், ஆசிட் வீச்சில் போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்னுடைய ஆட்சியில் உயிரோடு இருக்கமாட்டார்கள். திருட்டு, கொலை, கொள்ளைகளை தடுக்க நாடெங்கிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். வீட்டின் அறையை தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இதனால் குற்றவாளிக்கு யாருமே தப்ப முடியாது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |