Categories
மாநில செய்திகள்

தனியார் கிளினிக்குகளுக்கு… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!

கொரோனா அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்களை தனியார் கிளினிக்கில் மருத்துவமனைகளுக்கு தரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கிளினிக்குகளுக்கு வரும் நபர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், அறிகுறி உள்ளிட்ட விவரங்களை [email protected] என்ற இணையதளத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |