Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இயற்கையை பாதுகாக்க….. பசுமை மர வடிவம்…. ஒரே இடத்தில் சங்கமித்த 3,500 மாணவர்கள்….!!

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு நிகழ்வில் ஒரே இடத்தில் 3,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

சேலம் நெத்திமேடு தனியார் பள்ளியில் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பள்ளி மாணவர்களிடையே மரங்கள் வளர்ப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும்வருங்காலச் சந்ததியினரிடம் கொண்டு செல்லும் வகையில், 3500 மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 3,500 மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கக்கூடிய விளையாட்டு மைதானத்தில் மரங்கள் பசுமையாக காட்சி அளிக்ககூடிய வடிவில் பச்சை காவி கருப்பு உள்ளிட்ட நிற ஆடைகள் அணிந்து அமர்ந்தனர்.

இதனை ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து பார்க்கும்போது மாணவர்கள்பசுமையான மரங்கள் போலவே காட்சியளித்தனர். மற்றொருபுறம் இலைகள் இல்லாத வறட்சியான மரம் எப்படி இருக்கும் என்பது போன்ற வடிவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இதன் மூலம் புவி வெப்பமயமாதல் மழை பொய்த்துப் போதல் உள்ளிட்ட விபரீதங்கள் ஏற்படும் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று மாணவர்களிடையே அறிவுறுத்தப்பட்டது.

Categories

Tech |