Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவருடன் சேர்த்து வைக்குமாறு… கர்பிணி பெண் செய்த காரியம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கணவருடன் சேர்த்து வைக்ககோரி கர்பிணி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள மேலக்கூடலூர் பகுதியில் உள்ள கருணாநிதி காலனியில் முருகேஸ்வரி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான இவர் நேற்று மண்ணெண்ணையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நுழைவு வாயில் நின்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி கையில் இருந்த மண்ணெண்ணையை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் முருகேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேலக்கூடலூரில் உள்ள ஒரு தோட்டத்த்தில் முருகேஸ்வரி தனது பெற்றோருடன் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அங்கு டிரைவாரக பணியாற்றி வரும் அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த பழக்கத்தின் காரணமாக முருகேஸ்வரி கர்பமடைந்ததால் சுதாகர் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுதாகரின் குடும்பத்தினர் முருகேஸ்வரி ஏற்க மறுத்து கருவை கலைக்குமாறு கூறியுள்ளனர். இதற்கு முருகேஸ்வரி மறுத்ததால் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். இதுகுறித்து முருகேஸ்வரி உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் என் கணவருக்கு என்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் உள்ள நிலையிலும் அவரது குடும்பத்தினர் மறுப்பதால் என்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே என்னை என் கணவருடன் சேர்த்து வைக்குமாறு முருகேஸ்வரி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை தேனி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் முருகேஸ்வரி அளித்த புகாருக்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். கர்பிணி பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |