Categories
மாநில செய்திகள்

ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய…. நாளை அஞ்சல் அலுவலகங்களில்…. சிறப்பு முகாம் நடக்குது போங்க…!!

ஆதார் பதிவு மற்றும் திருத்த முகாம் நாளை தபால் நிலையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டில் பதிவு மற்றும் திருத்தங்களை செய்வதற்கு நாளை அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை மத்திய முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அஞ்சல் துறையின் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கு சிறப்பு முகாம் வரும் 13ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் புதியதாக ஆதார் முகவரி மாற்றம், புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, தொலைபேசி எண், 5 மற்றும் 15 வயதுப் பிள்ளைகளுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த சிறப்பு முகாம் தியாகராஜநகர், பார்த்தசாரதி கோயில், கோபாலபுரம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சூளைமேடு, நுங்கம்பக்கம், தியாகராய நகர் வடக்கு ஆகிய ஆகிய தபால் நிலையங்களில் சென்று பொதுமக்கள் சேவைகளை செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூபாய் 50 வசூலிக்கப்படும். புதிதாக ஆதார் பதிவு செய்பவர்களுக்கு சேவைக் கட்டணம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |