Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவை தடுக்க அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்கள் – மரியாதை அணிவகுப்பு நடத்திய காவல்துறை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பக்கபலமாகஇருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு  திருநெல்வேலி காவல்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடந்கு போடப்பட்டு மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் தூய்மை பணியாளர்களும் மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவுக்கு தங்கள் உழைப்பை அயராது வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுகாதார பணியை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அவர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் காவல்துறையினர் மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Categories

Tech |