வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் வாரணாசி பனராஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் 1857ஆம் ஆண்டின் சிப்பாய்க்கலகம் குறித்து பிரிட்டன் குறிப்புகளில் இடம் பெறாத தகவல்களை சுட்டிக்காட்டினார்.
சுதந்திரத்திற்கான முதல் போராட்டத்திற்கு கிராந்தி எனப் பெயரிட்டவர், வீர சாவர்க்கார்தான் என்று கூறிய அமித் ஷா, வீரசாவர்க்கர் இல்லாவிட்டால், அது ஒரு புரட்சிகரமான எழுச்சி என்பது நமது தலைமுறைகளுக்குத் தெரியாமலேயே போயிருக்கும் என்றார்.
தொடர்ந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை போரில்வென்ற ஹூவான்களை இந்தியாவின் ஸ்கந்தகுப்தா போன்ற வீரர்கள் விரட்டியடித்ததையும் அமித் ஷா நினைவுகூர்ந்தார்.