தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கீடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுகவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6ம், முஸ்லிம் லீக் 2 தொகுதியும், விசிகவுக்கு 6ம் தொகுக்கப்பட்டது. ஆனால் காங்கிரசுக்கு குறைவான தொகுதிகள் கொடுத்ததால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இதனால் மக்கள் நீதி மையத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கப் போவதாக தகவல் வெளியானது. நிலையில் காங்கிரசை அழிவிலிருந்து பாதுகாக்க இந்த தேர்தல் மிக முக்கியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பாஜக வெற்றி பெற்றுவிட்டால் அது காங்கிரஸின் இடத்தைப் பிடித்துவிடும் எனவே நாம் தவறான யுக்தியை கையாண்டு விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.