Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…”உழைப்பு அவசியம்”.. செலவு அதிகரிக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…!!  இன்று போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.  தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல் நலம் ஆரோக்கியத்தில் சிகிச்சை தேவைப்படும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

சரக்குகளை அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல் ஆற்றுவது ரொம்ப நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சண்டைகள் ஏற்படலாம்.  இன்று நாள் கொஞ்சம் கெடுபிடி யாகத்தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையைக் கையாண்டு சிறப்பான நாளாக இன்று நாளை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள், மனம் நிம்மதியாக காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது  நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |