சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் நன்மை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி வளம்பெறும். நிலுவைப்பணம் வசூலாகும். அன்புக்குரியவர் பரிசுப் பொருள்களை கொடுப்பார்கள். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் இல்லாவிட்டாலும், வருமானத்திற்கு எந்த குறையும் இல்லை.
தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். பஞ்சாயத்துக்கள் ஏதும் செய்ய வேண்டாம். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். கூடுமானவரை எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடினப்பட்டு படிக்கவேண்டும்.
கடினப்பட்டு பாடங்களைப் படியுங்கள் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்