திருவண்ணாமலை அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் அதே பகுதியில் உள்ள கூரப்பட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும் படியாக ஆறு நபர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள அவர்கள் 6 பேரும் ஆந்திராவிற்கு சென்று செம்மரம் வெட்டி கடத்த திட்டம் தீட்டி கொண்டிருந்தது தெரியவருகிறது. இதையடுத்து கணேசன், பிரபு, வெள்ளைச்சாமி, வேலுச்சாமி, ஏழுமலை சத்தியராஜ் ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.