Categories
மாநில செய்திகள்

மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காண… வருகிறது புதிய சட்டம்…!!

மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காண புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களின் குறைகளுக்கு தீர்வு கொடுக்க முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைப்பு குறைதீர்ப்பு மேலாண்மை என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை குறித்து, சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிக்கை தாக்கல் செய்து அவர் பேசினார்.

அதில் தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தனித்தனியே மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருவதாகவும், இதனால், ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை கொடுக்கும் சூழல் ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதை கருத்தில் கொண்டு பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றிற்குத் தீர்வு காண முதற்கட்டமாக 12 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |