Categories
தேசிய செய்திகள்

மொழி பிரச்சனையை தீர்ப்பதற்காக….. நில ஆவணங்களில் புதிய திட்டம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் நிலவளத்துறை இணைச் செயலாளர் சோன்மோனி போரா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி நாடு முழுதிலும் உள்ள பல்வேறு மக்கள் நில ஆவணங்களை கையாள்வதில் மொழி பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக தற்போது நில ஆவணங்களில் மொழிபெயர்ப்பு முறையை மத்திய அரசு கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் எழுதப்படும் நில ஆவணங்கள்  ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.

இதற்கான புதிய மென்பொருளை ரூபாய் 11 கோடியில் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதை ஒரு வருடத்திற்குள் முடிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நில ஆவணங்கள் மொழிபெயர்ப்பானது அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும். இந்த புதிய திட்டத்தின் மூலம் நில ஆவணங்களில் மக்கள் எதிர்கொள்ளும் மொழி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். மேலும் இந்தத் திட்டம் முதல் கட்டமாக ஜம்மு காஷ்மீர், திரிபுரா பீகார், உத்திரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |