சீன நாடுகளிலிருந்து கீழ்கண்ட மூன்று நாடுகளுக்கு மர்ம பார்சல் ஒன்று வந்துள்ளதையடுத்து அந்நாட்டு அரசுகள் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு தான். இந்த கொரோனா வைரஸ் சீனா நாட்டின் ஹூகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கி, இன்று உலக நாடுகளில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் சீன நாட்டின் மீது மிகுந்த அதிருப்த்தியில் இருக்கின்றனர். அதேபோல் இதை தொடர்ந்து சீன நாடானது இந்தியா மற்றும்அந்நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள பிற நாடுகளின் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்து மற்றொரு பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது.
இவற்றையெல்லாம் தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையை சீனா தற்போது ஏற்படுத்தியுள்ளது. அது என்னவெனில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த பலருக்கு தபால் மூலம் விதைகள் அடங்கிய பார்சல் ஒன்று வந்திருக்கிறது. இந்த பார்சல் சீனாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்புகள் உள்ள நிலையில், அதை யாரும் திறக்க வேண்டாம் அது விவசாயத்தை அழிக்கும் ஆயுதமாக இருக்கலாம் என்று கனடா அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு தற்போது விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உயிரி தாக்குதல் வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்தும் குறிப்பிடத்தக்கது.