Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளின் கவனத்திற்கு…. உடனே இத செய்யுங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழக அரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சம்பா பருவ பயிர் காப்பீடை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும்.

இந்த திட்டத்தில் 14 தொகுப்புகள் அடங்கிய நிலையில், 37 மாவட்டங்களில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2339 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மழை போன்ற பெரு வெள்ள காலங்களில் விவசாய பயிர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தினை சரி செய்வதற்காக காப்பீடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அனைவரும் முறையாக காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |