Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு…”அளவான பணவரவு”….. வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகும்…!!!

மகர ராசி அன்பர்களே…!! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். அளவான பணவரவு இருக்கும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்ணுங்கள். தாயின் அன்பு நம்பிக்கையை கொடுக்கும். தன்னம்பிக்கையுடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதியும் இருக்கும்.அது மட்டுமில்லாமல் எதிர்ப்புகள் விலகி செல்லும்.

தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் சரியாகும். அதேபோல் வியாபாரம் வளர்ச்சியைக் கொடுக்கும். ஏற்றுமதி துறையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று ஆதாயம் உங்கள் வாயில் கதவை தட்டும். கூடுமானவரை நீங்கள் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல தேவையில்லாத விஷயத்திற்காக பயப்படவேண்டாம்.குடும்பத்தைப் பொறுத்தவரை இன்று எந்த பிரச்சனையும் இல்லை.

ஒற்றுமை மேலோங்கும். அன்பு நீடிக்கும். இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |