Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கட்டுக்கோப்பான உடலுக்கு…” கட்டாயம் இத சாப்பிடுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

குளிர்காலத்தில் காலைவேளை மந்தமாக இருக்கும். எழுந்து உடற்பயிற்சி செய்வது பெரும்பாலும் நடக்காத விஷயமாகிவிடும். இதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட சில பழங்களை அதிகமாக சாப்பிடுவது, உடல் எடையை குறைப்பதில் உதவும் என்று கூறப்படுகிறது. அதிக அளவு நார்ச்சத்து, அழற்சிக்கு எதிராக செயல்படும் தன்மை (anti-inflammatory properties), உடலுக்கு இன்றியமையாத வைட்டமின்கள் அடங்கிய இப்பழங்கள், பல்வேறு உடல் ஆரோக்கிய குறைபாடுகளை குணப்படுத்துவதோடு, வயிற்று சதை குறையவும் உதவுகின்றன.

கொய்யா:

சுவைமிக்கது மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கியதுமாகும். கொய்யா பழத்தில் அதிக அளவு புரதம் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும் நிறைய உள்ளது. செரிப்பதற்கு அதிக நேரம் எடுப்பதால், கொய்யா தின்றால் நெடுநேரம் பசி இருக்காது. ஆகவே, தேவையற்ற நொறுக்குத்தீனிகள் மற்றும் தின்பண்டங்களை சாப்பிட்டு உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. ஆரோக்கியமாக காத்துக்கொள்கிறது. குளிர்காலத்தில் தட்டுப்பாடின்றி கிடைக்கக்கூடிய ஆரஞ்சு, குறைந்த அளவு எரிசக்தி (கலோரி) கொண்டது. இதில் கொழுப்பு அறவே கிடையாது.

அத்திப்பழம்:

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இதை சாப்பிட்டால் நெடுநேரம் வயிறு திருப்தியாக இருக்கும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளும் பண்பு அத்திப்பழத்திற்கு உள்ளது. இது வயிற்றுப்பகுதியிலுள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடை குறைவதற்கு உதவுகிறது.

சப்போட்டா:

உடல் எடையை குறைய வேண்டுமானால் முதலில் ஜீரண மண்டலம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். சாப்பிடும் உணவு நன்கு செரித்தால் மட்டுமே உடல் எடையை குறைக்கமுடியும். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் செரிமான மண்டலத்தை நன்கு செயல்பட வைக்கின்றன.

சப்போட்டா

சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால், இது நம் ஜீரண உறுப்புகளை நன்கு செயல்பட வைக்கிறது. வயிற்றுப்பிரச்னை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதின் மூலம் உடல் எடை குறைய உதவுகிறது.

திராட்சை:

உடல் பருமன் பற்றிய ஆய்விதழ் கறுப்பு திராட்சையில் இருக்கும் ரெஸ்வெரட்டோல் என்ற பொருள், நல்ல கொழுப்பு உற்பத்தியாக உதவுகிறது என்று தெரிவித்துள்ளது.

உடல் பருமனாக காரணமான கொழுப்பு உற்பத்திக்கு இது பயன்படுவதில்லை. குளிர்காலத்தில் தாராளமாகக் கிடைக்கக்கூடிய இந்தப் பழங்களை சாப்பிட்டு, வயிறு மற்றும் இடுப்பிலுள்ள சதைகளை குறைத்து கட்டுகோப்பான உடல்வாகை பெறலாம்.

Categories

Tech |